Latestஉலகம்

பகடிவதை செய்யப்பட்ட மாணவன் இரயில் தண்டவாளத்தில் தற்கொலை

சுர்ரே, ஜூலை 18, நண்பர்களால் தாம் எப்பொழுதும் பகடிவதைக்கு உள்ளாவதால் துக்கம் தாளாமல் 14 வயது மாணவன், 50 மாணவர்களின் கண் முன்னே இரயில் தண்டவாளத்தின் மேல் படுத்து  தற்கொலை செய்து கொண்டான்.

இக்கோர சம்பவம் சுர்ரே, செர்ட்சி இரயில் நிலையத்தில் நடந்துள்ளது. இச்சம்பவத்தில் சாம் கொன்னொர் என அடையாளம் கூறப்பட்ட அந்த மாணவன் தன்னுடைய புத்தகப்பை மற்றும் கைத்தொலைப்பேசியையும் நண்பரிடம் கொடுத்து விட்டு தண்டவாளத்தில் படுத்துள்ளான்.

சம்பந்தப்பட்ட அந்த இரயிலில் பயணித்த லூயிஸ் (வயது 28) என்பவர், இரயிலில் வந்து கொண்டிருந்தபோது செர்ட்சி இரயில் நிலையத்தை முழுமையாக அடைவதற்குள் திடீரென இரயில் இடையிலேயே நிறுத்தப்பட்டதாகக் கூறினார்.

பிறகு, காரணம் அறியாமல் திகைத்துக் கொண்டிருந்த போது லூவிஸ் சில மாணவர்கள் இரயில் நிலையத்தில் அழுவதையும் இன்னும் சில மாணவர்கள் தண்டவாளத்தில் இறங்கி மற்றொரு மாணவனை கூப்பிட்டவாறு ஓடுவதையும் கண்டுள்ளார்.

ஆரம்பத்தில், தண்டவாளத்தில் யாரோ கைத்தொலைப்பேசியை விட்டு சென்றுள்ளதாக யுகித்துக் கொண்டிருந்த லூவிஸ் பின் அங்கிருந்த மாணவர்கள் அழுவதை கண்டதும் ஏதோ  அசம்பாவிதம் நேர்ந்துள்ளது என்பதை உணர்ந்துள்ளார்.

மேலும், அங்கிருந்த மாணவர்கள் சாலேசியன் இடைநிலைப் பள்ளியை சேர்ந்தவர்கள் என்பதால் லூவிஸ் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்குத் தகவல் கூறியுள்ளார்.

தற்கொலை செய்த அம்மாணவன் எப்பொழுதும் பகடிவதைக்கு உற்படுத்தப்படுவதால் துக்கம் தாளாமல் தற்கொலை  செய்து கொண்டுள்ளான் என போலீசார் நம்புகின்றனர். இறந்த அம்மாணவனின் உடலுக்கு அருகில் சிறிய குறிப்பு கிடைத்துள்ளது என காவல் துறையினர் கூறினர்.

இச்சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்த போது , அம்மாணவன் இதுவரையிலும் பகடிவதைக்கு உள்ளாகிய சம்பவம் எதுவும் புகார் செய்யப்பட வில்லை என பதிலளித்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker