Latestஇந்தியா

பிரியங்கா காந்தியின் வைரலாகும்” சாரி ஹேஸ்டேக்” புகைப்படம்!

புதுடெல்லி, ஜூலை. 18 – இவ்வாரம் முழுவதுமே சாரி அணிந்த போட்டோவை பதிவிட்டு பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று பிரியங்கா காந்தி தனது திருமண சேலை அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிகமாக லைக்குகளை பெற்று வருகிறார். இப்புகைப்படம் பரவலாக வைரலாகி வருகிறது.

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதனால் அனைத்து மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்களும் ராஜினாமா செய்து வருகின்றனர். அடுத்த காங்கிரஸ் தலைவர் யார் என்பது குறித்து கட்சியின் பலரும் கேள்வி எழுப்பும் நிலையில் காங் கிரஸ் அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுலின் தங்கையுமான பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் 22 ஆண்டுகளுக்கு முன்னர் தன் திருமணத்தின் போது அணிந்திருந்த இளம்சிவப்பு பனாரஸ் பட்டு புடவை அணிந்த படத்தை டுவிட்டரில் பதிவிட்டார்.

இந்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக பெண்கள் அணியும் சேலை பிரசித்தி பெற்ற பாரம்பரியம் என கருதப்படுகிறது. கடந்த சில தினங்களாக ‘சாரி ஹேஸ்டேக்’கில் பரவலாகி வருகிறது.

இவ்வாரம் முழுவதுமே சாரி அணிந்த போட்டோவை பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் வெளி இட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று பிரியங்கா காந்தி தனது திருமண சேலையை அணிந்து இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. புடவையின் மாண்பு பிரபலங்களிடமிருத்தும் மேலும் மகத்துவம் பெற்று வருகிறது என்பதற்கு இது ஒரு சான்று!

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker