Latestஉலகம்

வரதட்சணை விவகாரம் – திருமணமாகிய 24 மணி நேரத்தில் விவாகரத்து

லக்னோ, ஜூலை 18,  ஜஹாங்கிராபாத்தில் திருமணமாகி அடுத்த நாள் மனைவியை விவாகரத்து செய்த கணவரின் செயல் அங்குள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஷாஹி ஆலாம் என்ற அந்த ஆடவன் திருமண வரதட்சணையாக  மோட்டார் சைக்கிளைக் கொடுக்காத அதிருப்தியின் காரணத்தினால் தம்முடைய மனைவியை திருமணமாகிய 24 மணி நேரத்தில் விவாகரத்து செய்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி நடந்த அவர்களின் திருமணத்தின் அடுத்த நாளில் விவாகரத்து செய்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் தந்தை தம்முடைய மாப்பிள்ளை மற்றும் மாப்பிள்ளையின் குடும்பத்தாரின் மீதும் வரதட்சணைச் சட்டத்தின் கீழ் புகார் கொடுத்துள்ளார்.

பதிவு செய்யப்பட்ட அந்த புகாரின் அடிப்படையில் முழுமையான விசாரணைக்கு பின் காவல் துறையினர் தக்க சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுவர் என அதிகாரி அக்காஷ் டோமர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker