உலகம்

உலகப் பணக்காரர்களில் 4 இந்தியர் -ஒரு தமிழர் 

புதுடில்லி் ஜூலை,19- இந்த ஆண்டிற்கான உலக பணக்காரர்கள் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது புளூம் பெர்க். இதில் இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இந்த ஆண்டிற்கான உலக பணக்காரர்கள் தரவரிசையில் மொத்தம் 500பணக்காரர்கள் பட்டியல் இடப்பட்டுள்ளன. இந்த தரவரிசை ஆனது அவர்களது சொத்து மதிப்பு மற்றும் உலக பங்குச் சந்தையில் அவர்கள் நிறுவனங்களின் பங்கு விகிதம் ஆகியவற்றை கணக்கிட்டு தயார் செய்யப்பட்டுள்ளது.

உலக கோடீஸ்வரர்களில் 14 வது இடத்தைப் பிடித்திருக்கிறார் முகேஷ் அம்பானி. இவரது சொத்து மதிப்பு 51.3 பில்லியன் டாலர் ஆகும்.

விப்ரோ மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் அசிம் பிரேம்ஜி 20 மில்லியன் டாலர் சொத்துக்களை சேர்த்து 48 இடத்தில் இருக்கிறார் .இந்தியாவில் பெங்களூரை மையமாகக் கொண்டு இயங்கும் விப்ரோ நிறுவனத்தில் உலகம் முழுவதும் இருந்து மொத்தம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள்

உலக கோடீஸ்வரர்களில் 91 ஆவது இடத்தில் இருக்கிறார் தமிழரான ஷிவ் நாடார் .ஹெசிஎல் நிறுவனத்தைத் தொடங்கிய இவர் பத்மபூஷன் விருதை பெற்றுள்ளார். இவரது அம்மா வாமசுந்தரதேவி தினத்தந்தி நிறுவனர் ஆதித்தனாரின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது சொத்து மதிப்பு 14.7 பில்லியன் டாலர் உலக கோடிஸ்வரர்கள் பட்டியல் 94வது இடத்தில் இருக்கிறார்.

உதய் கோடக் மகேந்திரா வங்கி நிறுவனரான இவரது சொத்து மதிப்பு 14 பில்லியன் டாலர்களாகும் இவர்களை தவிர்த்து மொத்தம் 500 பணக்காரர்களில் இந்துஜா ஹிந்துஜா குழுமத்தின் நிறுவ நிறுவனர்களான கோபிசந்த்,ஹிந்துஜா பிரகாஷ் ஹந்துஜா அசோக் ஹிந்துஜா ஆகியோர் 498, 499 மற்றும் 500 இடங்களை பிடித்துள்ளனர்.

இவர்கள் மூவருமே சகோதரர்கள். அசோக் லேலண்ட் இன்டஸ் லேன்ட் வங்கி, ஆயில் நிறுவனம் என இவர்கள் இந்தியாவில் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை நிர்வகித்து வருகிறார்கள். தவிர உலகெங்கும் மேலும் பல தொழில்களில் ஈடுபட்டுள்ளனர் இவர்கள் ஒவ்வொருவரது சொத்து மதிப்பு தல 4.13 பில்லியன் டாலர்கள் ஆகும்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker