Latestமலேசியா

மிரட்டி பணம் பறித்து வந்தனர் ; 3 போலீஸ் அதிகாரிகள் கைது !

கோலாலம்பூர், ஜூலை.19- அந்நிய தொழிலாளர்களை மிரட்டி பணம் பறித்து வந்த குற்றத்திற்காக புக்கிட் ஆமானின் தீவிரவாத தடுப்பு பிரிவைச் (இ8) சேர்ந்த மூன்று போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் சில மாதங்களாக நடைபெற்ற வந்த சுமார் 12 பண மிரட்டல் சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த வியாழக்கிழமை கடை உரிமையாளர் ஒருவர் வழங்கிய புகாரின் அடிப்படையில் 1 இன்ஸ்பெக்டர், 2 கான்ஸ்டேபல் அதிகாரிகளை கைது செய்துள்ளோம். அவர்கள் அனைவரும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள 12 கடைகளை மிரட்டி பணம் பறித்ததை நாங்கள் கண்டறிந்தோம். அதில் அம்பாங் பகுதியில் 4 சம்பவங்கள், ஸ்தாபாக் – செலாயாங் பகுதிகளில் 2 சம்பவங்கள், சுங்கை பூலோ – உலு யாம், மேரு, கிள்ளான் ஆகிய பகுதிகளில் தலா ஒரு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

கடந்த ஜூலை 11ஆம் தேதி  அம்மூவரும் அம்பங்கில் உள்ள கடை ஒன்றில் நுழைந்து அங்குள்ள அந்நிய நாட்டு பணியாளரை கைது செய்து அவரை அம்பாங் ஜெயா காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். காரில் அந்த அந்நிய நபரை மூவரில் ஒருவன் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளான்.

அந்த கடையின் உரிமையாளர் பணியாளரின் கைப்பேசிக்கு தொடர்பு கொண்ட போது  அவர்கள் பணியாளரை விடுவிக்க 1,500 பணம் கேட்டுள்ளனர். அந்த உரிமையாளரும் பணம் வழங்கியவுடன்  அந்த அந்நிய பிரஜையை விட்டு சென்றுள்ளனர் என போலீஸ் துறை வட்டாரம் தெரிவித்ததாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker