Latestஇந்தியா

விபத்தில் சிக்கி 14 வயது குழந்தை நட்சத்திரம் மரணம்!

ராய்ப்பூர்,ஜூலை.20- குழந்தை நட்சத்திரமாக பல இந்தி சீரியல்களில் நடித்து மிக சிறிய வயதிலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷவ்லேக் சிங். இவர் நேற்று நடந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

14 வயதே ஆகும் ஷிவ்லேக் சிங், சங்கத்மோட்சன், சேகரால்சிம்ரா, ஹனுமன் உள்ளிட்ட பல சீரியல்களிலும், ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு புகழ் பெற்றவர்.

இவர் நேற்றைய தினம் ராய்ப்பூர் வழியாக காரில் தன் தாய் தந்தையுடன் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லோரி மீது இவர்கள் சென்ற கார் மோதி அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் ஷிவ்லேக் சிங். இவருடைய தாய் தந்தையர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .இவரது தாய் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கோர விபத்து குறித்து ராய்ப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker