Latestமலேசியா

அமைச்சரவையில் மாற்றம் இல்லை – துன் மகாதீர்

செர்டாங், ஜூலை 21 – அமைச்சரவையில் மாற்றம் எதுவும் இல்லை என பிரதமர் தும் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை அமைச்சரவை உறுப்பினர்களின் புகைப்படம் எடுத்துக் கொள்ளப்பட்டதை அடுத்து அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என யூகங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

வெள்ளிக்கிழமை வழக்கத்துக்கு மாறாக அமைச்சர்கள் அனைவரும் வந்திருந்ததால், அந்தப் புகைப்படம் எடுத்துக் கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அமைச்சரவையில் மாற்றம் எதுவும் முடிவாகவில்லை என்றும் சில சமயங்களில் மக்களின் கருத்துக்கிணங்கவே மாற்றம் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவைக் கூட்டம் நடப்பதற்கு முன்னர், அந்தப் புகைப்படம் எடுத்துக் கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

பிரிபூமி பெர்சத்துவின் தேர்தல் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. சமர்ப்பிக்கப்பட்ட 79 சட்டத் திருத்தங்கள் 900 பேராளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கட்சி அம்னோவைப் போல மக்களை உதாசீனப் படுத்தி சுய லாபத்திற்காக செயல்பட்டால், மக்கள் நம்மை நிராகரிப்பார்கள் என நினைவுபடுத்தினார். தங்களை வளப்படுத்துவோரை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker