Latestமலேசியா

ஐஜிபியின் அறிவிப்பை ஏற்றுக் கொண்டது: மகிழ்ச்சி – அஸ்மின்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 21 – வீடியோ சம்பந்தமான ஐஜிபியின் அறிவிப்பை ஏற்றுக் கொள்வதாக அன்வாரின் நிலைப்பாட்டைக் கண்டு தாம் திருப்தி அடைவதாக அஸ்மின் அலி தெரிவித்தார்.

சனிக்கிழமை போர்ட்டிக்சனில் பேசிய அன்வார் இப்ராஹிம், பாலியல் வீடியோவில் அஸ்மின் இருப்பது உறுதிப்படுத்த முடியாததால். அஸ்மின் அலி அதில் சம்பந்தப் படவில்லை என முடிவுக்கு வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

ஜூலை 18இல் போலீஸ் படைத்தலைவர் அப்துல் ஹமிட் படோர், வீடியோவில் இருக்கும் இரு நபர்களின் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்திருந்தார்.

தமக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் அந்த ஆபாச வீடியோவைத் தயாரித்து, விநியோகம் செய்தோர் மீது கட்சி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என தாம் நம்புவதாக அஸ்மின் குறிப்பிட்டிருந்தார்.

நான் முன்பே சொன்னது போல், ஒருவரின் மீது சேற்றை வாரி வீசி களங்கம் விளைவித்து பதவியில் இருந்து வெளியேற்றும் சதி, அநாகரிக அரசியலை தாம் வெறுப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker