Latestமலேசியா

காரோட்டும்பயிற்சிப் பள்ளிகள் ஊழலுக்கு உடந்தையா?- கடுமையான நடவடிக்கை

சிரம்பான், ஜூலை 21 – வர்த்தக வாகன உரிமத்தைப்(பிஎஸ்வி) பெற்றுத் தர காரோட்டும் பயிற்சி உரிமையாளர்கள் ஊழல் நடவடிக்கையில் ஈடுபடுவது கண்டு பிடிக்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அவர்களின் மீது கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களின் உரிமங்கள் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

காரோட்டும் பயிற்சிப் பள்ளிகளின் நடவடிக்கை அமைச்சுக்கு சினத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர்கள் பிஎஸ்வி உரிமத்துக்காக வாடிக்கையாளர்களுக்குத் தரகு ஏஜெண்டாகச் செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென அந்தோணி எச்சரித்தார்.

காரோட்டும் பயிற்சிப் பள்ளிககளைப் பற்றி பல புகார்களைப் பெற்று வருவதாகவும் அது பொதுமக்களைப் பாதிக்கும் என்பதால், அது எக்காரணத்துக்காகவும் விட்டுக் கொடுக்கப்படாது என தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker