Latestசினிமா

சர்ச்சையில் சிக்கிய பிரபல தொகுப்பாளினி பிரியங்கா!

சென்னை,ஜூலை.21- தொலைக்காட்சி தொகுப்பாளினி பிரியங்காவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.இவர் தற்போது ஏடாகுடமாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை காண கோடான கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். பிரபல தொலைக்காட்சியின் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் பிரியங்கா செய்யும் அதி லூட்டி பார்வையாளர்களை எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது .

இந்த சீசனில் மூக்குத்தி முருகன் என்ற போட்டியாளர் பிரியங்கா மீது ஆசை வைத்து இருக்கிறாராம். பிரியங்காவோ செந்தில் மீது ஆசை வைத்திருக்கிறார். செந்திலை பிரியங்காவிடம் நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்வது ராஜலட்சுமியின் வேலையாம். இப்படி நிகழ்ச்சியில் இவங்க பண்ற கேலிக்கூத்தை கலாச்சார சீரழிவு என்று பல விமர்சனங்கள் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு முக்கோண காதல் என்று கல்யாணம் ஆனவர்கள் சிக்கிக்கொள்ள இதை நடுவர்கள் பார்த்து ரசித்த வண்ணம் இருக்கிறார்கள். இது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் காலத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் அவர்களின் திறமையை மற்றும் வெளிப்படுத்தினால் போதும் .நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker