Latestசினிமா

சிம்புவை பாடாய்படுத்திய தீய சக்திகள் :-துரத்தியடித்த டி. ராஜேந்தர்!

சென்னை,ஜூலை.21- நடிப்பு, திறமை, தொழில் நுட்ப அறிவு, இசை ,நடனம் ,பாடல், இயக்கம் என சினிமாவில் சகல துறைகளும் கலக்கி வருவதால் கொண்டாடப்பட வேண்டிய சிம்பு சர்ச்சையில் சிக்கி சறுக்கி வருகிறார் .

கடந்த ஒரு வாரம் சிம்பு நடிக்கும் மாநாடு படம் ரிலீஸ் ஆகாது. சிம்பு சனி, ஞாயிறுகளில் சூட்டிங் வரமாட்டார் என்ற தகவல் வெளியாகி சிம்புவுக்கு வம்பாகிவிட்டது .

ஆனால் உண்மை அதுவல்ல என்கிறார்கள் .சிம்பு இப்போது மட்டுமல்ல எப்போதுமே அப்படி ஒரு கட்டுப்பாடு எந்த தயாரிப்பாளர்களிடம் விதித்ததில்லை. இந்த வதந்தி பரவக் காரணம் சிம்புவின் உதவியாளர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களான தீபன் பூபதி மற்றும் தேவராஜன் இருவரும் தான் .

சிம்பு உடன் 24 மணி நேரம் ஒட்டிக் கொண்டே இருப்பர். சிம்புக்கு எல்லாமுமாகிருந்து வந்தனர். ஒரு படம் எப்போ சூட்டிங் ,எவ்வளவு சம்பளம், என்பதில் ஆரம்பித்து சிம்புவின் கால்சீட் பார்ப்பதும் இவர்கள்தான். சிம்புவின பெயரைச் சொல்லி பல தயாரிப்பாளர்களிடம் கால்சீட் தருவதாக சொல்லி அட்வான்ஸ் வாங்கி இருக்கின்றனர். இது எல்லாமே சிம்புவுக்கு தெரியாது. சிம்புவின் காதுக்கு விஷயம் தெரியாமல் தயாரிப்பாளர்களும் சிம்பு படம் பண்ணுவதாக அவர்களிடம் அட்வான்ஸ் பணம் கொடுத்து ஏமாந்து இருக்கின்றனர்.

இரவு முழுவதும் பாட்டியில் குடித்து விட்டு அடுத்த நாள் சூட்டிங் இருந்தால், சிம்பு இன்னைக்கு சூட்டிங் வரமாட்டார் என்று சிம்பு பெயரை தொடர்ந்து பஞ்சர் ஆக்கி இருக்கிறார்கள் .தயாரிப்பார்கள் கொடுத்த பணம் சிம்புவின் பாக்கெட்டிற்கே போகாது. மாறாக தீபன் பூபதி, தேவராஜும் அதை இப்படி ஆட்டையைப் போட்டு விடுகின்றனர்.

இது தான் உச்சகட்ட மோசடி. இவர்களால்தான் அப்பாவி சிம்புவின் பெயர் தொடர்ந்து கெடுகிறது என்று அவரின் நலன்விரும்பிகள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
அதன் பிறகுதான் எல்லாம் அதிரடியாக செயல்பட தொடங்கியிருக்கிறது.

சும்மாவே தலையை சிலிர்த்துக் கொண்டு வார்த்தைகளில் சலங்கை கட்டி ஆடும் டி்ஆர் காதுக்கு விஷயம் எட்ட தனது பாணியில் தீபன் பூபதி ,தேவராஜன் துரத்திவிட்டார் டிஆர்.

இப்போது சிம்புவின் கால்சிட்டை அவரது அம்மா, தங்கை இலக்கியாவின் பார்த்துக்கொள்கிறார்கள். வழக்கம்போல டி ஆர், சிம்புவின் ஜாதக கட்டங்களை வைத்து சோழி உருட்ட ஆரம்பித்திருக்கிறார் .

.சென்ற 18ஆம் தேதியோடு சிம்பு திரை உலகில் அடி எடுத்து வைத்து 35 ஆண்டுகள் ஆகிறதாம் .அன்றோடு சிம்புவை சுற்றியிருந்த தீய சக்திகள் எல்லாம் துரத்தப் பட்டு விட்டது. இனி சிம்புவுக்கு எப்போதுமே ஏறுமுகம் தான் என்று சொல்லி இருக்கிறார் டி ராஜேந்தர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker