Latestமலேசியா

தாயாரும் இரு பிள்ளைகளும் தீயில் பலி!

குவாந்தான், ஜூலை 21- குவாந்தான், சுங்கை ஈசாப் பகுதியின் வீடமைப்புப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகினர்.

இன்று காலை 7.45 மணியளவில் நேர்ந்த அந்த தீ விபத்தில் ஒரு பெண் மற்றும் அவரின் இரு பிள்ளைகள் கொல்லப்பட்டதாக மாநில தீயணைப்பு, மீட்புப் படைத் தலைவர் நோர் ஹிஷாம் முகமட் தெரிவித்தார்.

ஓர் அறையில் உறங்கிக் கொண்டிருந்த அந்த மூவரின் உடல்கள் வீட்டின் அறையில் கருகிய நிலையில் காணப்பட்டன.

பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு 30 வயது என்றும் பிள்ளைகளுக்கு 7, 10 வயதாகி இருப்பதாவும் தீக்கான காரணம் ஆராயப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker