Latestமலேசியா

நாட்டின் கடனுக்கு 1எம்டிபிதான் காரணமா? நஜிப் கேள்வி

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 21 – நாட்டின் கடனாக 3,220 கோடி அதிகரித்துள்ளதற்கு 1எம்டிபிதான் காரணம் என அரசு கூறுவது முறையல்ல என முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.

2017இல் 68,680 கோடியாக இருந்த நாட்டின் கடன் 2018இல் 74,100 கோடியாக அதிகரித்துள்ளதற்கு 1எம்டிபியின் நிதி முறைகேடும் திட்டமிடப்படாத முதலீடுகளும்தான் காரணம் என அனைத்துலக, தொழிற்துறையின் முன்னாள் அமைச்சர் முஸ்தாபா முகமட் தெரிவித்திருந்தார்.

அதற்கு மறுமொழி கூறிய, நஜிப் 2016இல் 1எம்டிபியின் கடன் அதிகரித்திருக்க வில்லை என குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், 2018இல் அது அதிகரித்துள்ளதாகக் கூறப்படுவது அதிசயமாகவும் 1எம்டியின் மீது குற்றம் சொல்வது அதிர்ச்சியாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஜூன் மாதம் நாட்டின் கடன் 8040 கோடி அதிகரித்ததற்கு 1எம்டிபிதான் காரணம் என கூறினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை என சுட்டிக் காட்டினார்.

கடன் மீதுதான் பக்காத்தான் கவனத்தைச் செலுத்துகிறது. ஆனால், 1எம்டிபியின் முதலீடுகள் வருமானத்தை ஈட்டித் தந்ததை மறைத்து விட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

1எம்டிபி, சுயேச்சை மின் உற்பத்தியாளர்களின் சார்பாக இருந்த ஒப்பந்தங்களை சீராக்கியது, பண்டார் மலேசியா திட்டத்தில் 8 இராணுவத் தளங்கள் நிர்மாணிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

துன் ரசாக் எக்செஞ்ச், டாக்சி ஓட்டுநர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஹஜ்ஜுப் பிரார்த்தனைக்குச் செல்ல உதவி அளித்ததையும் மறந்து விடக்கூடாது,

பக்காத்தான் 15 மாத காலமாகப் பதவியில் இருந்தாலும், 1எம்டிபியின்மீதே குறை கண்டுபிடிப்பதில்தான் ஆர்வம் காட்டுவதாக நஜிப் குற்றம் சாட்டினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker