Latestஉலகம்

மருத்துவர்களின் தவறான முடிவு:- தனது மார்பகங்களை  இழந்த இளம்பெண்!

லண்டன்,ஜூலை.21-  இளம் பெண் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதாக தவறாக கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவரது இரண்டு மார்பகங்களும் அகற்றப்பட்டதோடு பல மாதங்கள் கடுமையான கீமோதெரபி உட்படுத்தப்பட்டதால் தலைமுடி மொட்டையான கொடுமையும் பிரிட்டனில் நடந்தேறியுள்ளது.

ஸ்டாப்போர்ட்சய்யரை சேர்ந்த  சாரா வயது 28 .ஒரு நாள் தனது மகன் தாய்ப்பால் குடிக்க மறுத்துள்ளதோடு  கடுமையாக அழவே ஏதோ பிரச்சினை என்று பயந்து ராயல்ஸ் ஸ்டோக் ஹாஸ்பிடலுக்கு சென்று இருக்கிறார். அவர் பயந்தது போல அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

புற்றுநோய் பரவும் என கூறி அவரது இரு மார்பகங்களையும்  அகற்றிவிட்டனர். பின்னர் பல மாதங்களுக்குப் பிறகு அவருக்கு புற்றுநோய் இருப்பது தவறாக  கண்டுபிடிக்கப்பட்டது மருத்துவர்களுக்கு தெரிய வந்தது.

உண்மை என்னவென்றால் உடலிலிருந்து எடுக்கப்படும் திசு மாதிரிகளை  ஆராய்ந்து புற்றுநோய் உள்ளதா இல்லையா என்பதை கண்டறியும்  ஆய்வக மருத்துவர் ஒருவர் சாராவுக்கு புற்றுநோய் இருப்பதாக தவறாக தெரிவித்துவிட்டார்.

பல மாதம் கீமோவுக்குப் பின்   தலை கூந்தலிருந்து  மார்பகங்களை வரை இழந்துள்ளார்.  செயற்கையாக பொருத்தப்பட்ட மார்பினால் எதிர்காலத்தில் உண்மையாகவே புற்றுநோய் ஏற்படும் அபாயத்தில் வேறு இருக்கிறார்.

நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு உள்ள மருத்துவமனை நிர்வாகம், சாரா தொடர்ந்து  உள்ள வழக்குக்கும் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது .அதன்  விளைவாக இனி குழந்தை பிறக்காது என்று கூறப்பட்ட நிலையில் சாராவுக்கு இரண்டாவதாக ஒரு குழந்தையும்  பிறந்துள்ளது .ஆனால் தனது மார்பகங்கள் அகற்றப் பட்டு விட்டதால் அந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட முடிவதில்லை என்கிற விஷயம் வேறு தன்னை வேதனை அடைய  செய்துள்ளதாக கூறி உள்ளார்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker