Latestமலேசியா

86 விழுக்காட்டுப் பகுதிகளில் நீர் விநியோகம் – சீரடைந்தது

ஷா ஆலம், ஜூலை 21 – துண்டிக்கப்பட்டிருந்த கிள்ளான் பகுதிகளில் 86 விழுக்காட்டுப் பகுதிகளுக்கு நீர்விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டது.

கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர் பகுதியில் அது முற்றாக வழக்க நிலைக்குத் திரும்பவில்லை.

நீர் இன்னும் துண்டிக்கப்பட்டிருக்கும் இடங்களுக்கு லோரிகளில் நீர் அளிக்கப்பட்டு வருவதாக சிலாங்கூர் நீர் நிர்வாக நிறுவனத்தின் வாடிக்கையாளர் உறவு அதிகாரி அப்துல் ராவோப் அகமட் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை, கோலாலம்பூர், பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் கோலாலங்காட்டின் 1,133 வட்டாரங்களில் 1,166,842 பேர் பாதிக்கப்பட்டனர்.

சுங்கை சிலாங்கூர் 1,2, 3 ஆகிய பகுதிகளில் ரந்தாவ் பாஞ்சாங் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீர் துர்நாற்றம் வீசியதால், அந்தி சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker