Latestஉலகம்

காப்பி போட்டு குடித்ததால் ஊரை விட்டு வெளியேற்றப்பட்ட ஜோடி!

வெனிஸ்,ஜூலை,22- இத்தாலியில் படிக்கட்டில் அமர்ந்து காப்பி போட்டுக் குடித்த ஒரு தம்பதியினர், நகரை விட்டு வெளியேற்றப்பட்ட விசித்திரம் ஒன்று நடந்துள்ளது.

இத்தாலி நகரில் அமைந்துள்ள வெனிஸ் நகரம் பல குட்டித் தீவுகளை கொண்ட ஒரு நகரமாகும். இங்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதும் போவதுமாக உள்ளனர் .ஒரு ஆண்டுக்கு மூன்று கோடி சுற்றுலா பயணிகள் வெனிஸ் நகருக்கு வந்து போவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜெர்மனியை சேர்ந்த 35 வயது ஒத்த சுற்றுலா பயணிகளான ஒரு தம்பதியினர் வெனிஸ் நகரில் உள்ள ரெயில் பாலத்தின் படிக்கட்டில் அமர்ந்து காப்பி போட்டு குடித்துக் கொண்டிருந்தனர்.

இதனை பார்த்த சிலர் பொது இடத்தில் இவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது என அந்த ஜோடியினரை கண்டித்துள்ளனர். அந்த ஜோடி அதற்கு செவி சாய்க்கவில்லை.

அதனால் வெனிஸ் நகரின் மேயர் அலுவலகத்தில் புகார் செய்தனர். இதனை அடுத்து உடனே போலீசார் அவர்களை பிடித்து 853 பவுண்ட அபராதம் விதித்தனர் . அதோடு அவர்களை நாட்டை விட்டே அந்த வெளியேற்ற வேண்டும் என உத்தரவிட்டனர். வெறும் காப்பி போட்டு குடித்த காரணத்தால் இந்த தம்பதியினர் நகரை விட்டு வெளியேற்றப்பட்ட செய்தி விசித்திர சம்பவமாக பார்க்கப்படுகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker