Latestமலேசியா

பினாங்கு மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி !

ஜார்ஜ்டவுன், ஜூலை.22-  மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கத்தின், தித்தியான் டிஜிட்டல் திட்டத்தின் பினாங்கு மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி அண்மையில் பினாங்கு மெட்ரிகுலேஷன் கல்வி மையத்தில் நடைப்பெற்றது. இம்முறை போட்டியில் 25 பள்ளிகளைப் பிரதிநிதித்து 85 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பத்து கவான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு கலந்துக் கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை எடுத்து வழங்கினார். அவர் தமதுரையில், வரும் காலங்களில் தொழில்நுட்பம் தொடர்பானப் போட்டிகளை நடத்தப் பினாங்கு மாநில அரசாங்கம் இணைந்து செயல்படக்கூடிய சாத்தியம் உள்ளது.

மேலும் இன்றைய தமிழ்பள்ளி மாணவர்கள் அவர்களிடம் இருக்கும் திறன்பேசிகளைக் கவனமாகவும், தகுந்தப் பாதுகாப்பு அம்சங்களுடன் பயன்படுத்த வேண்டும்.  பல விதமான சமூதாயச் சீர்கேடுகளை விளைவிக்கும் பல செயல்கள் இந்த திறன்பேசிகளின் மூலமும் நிகழ்கின்றன என கருத்துரைத்தார்.

நிகழ்வில் வாழ்த்துரை வழங்கிய இப்போட்டியின் ஏற்பாட்டுக் குழு தலைவர் ரவிசந்திரன் செல்லகண்ணு, இனி வரும் காலங்களிலும்  இந்தப் போட்டிக்கு அதிகளவில் மாணவர்கள் கலந்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்த தித்தியான் டிஜிட்டல் திட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கத்தால் தொடங்கப்பட்டது.  இந்தத் திட்டத்தின் வழி தமிழ்ப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்போட்டி கடந்த 5 வருடங்களாக நடைப்பெற்று வருகிறது. இதில் 5 போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, அதில் தகவல் தொடர்புத் தொழில்நுட்பப்
புதிர்ப்போட்டி மட்டுமே மாநில அளவில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker