Latestமலேசியா

பேராக் – கெடா FA கிண்ணம்; இரசிகர்களிடையே ஒற்றுமை வேண்டும்

ஈப்போ ஜூலை 22,எதிர்வரும் 27-ஆம் தேதி, பேராக்-கெடா அணிகளுக்கு இடையிலான, 2019-ஆம் ஆண்டுக்கான FA கிண்ணக் காற்பந்தாட்டத்தின் இறுதிச் சுற்றுக்கான களம் இரு அணிகளை இணைக்கும் நட்பு களமாக அமையுமென பேராக் மந்திரி டத்தோ ஶ்ரீ அகமட் பைசால் அசுமு நம்பிக்கைத் தெரிவித்தார்.

அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்கும் அம்சமாக விளையாட்டு விளங்க வேண்டும். மாறாக, குறிப்பிட்ட சில தரப்பினர் மற்றும் ஆதரவாளர்கள் உணர்ச்சியை சீண்டும் அளவுக்கு தங்களது மாநில பற்றை காட்டும் தளமாக அமையக்கூடாது என்றாரவர்.

மாறுப்பட்ட அணிகளின் ஆதரவாளர்களாக இருந்தாலும், விளையாட்டின் மீதான பற்றையே வெளிப்படுத்த வேண்டும். வெவ்வேறு மாநில அணிகளுக்கு நாம் ஆதரவாளர்களாக இருந்தாலும், நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் மலேசியர்கள் என்பதை மறந்து விடக்கூடாது என மந்திரி பெசார் வலியுறுத்தினார்.

அதன் அடிப்படையில், இரு மாநில அணிகளின் ஆதரவாளர்களை ஒன்றிணைக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய கெடா அணி தரப்புடன் அதிகாரப்பூர்வற்ற சந்திப்பு நடத்தியுள்ளதாக அவர் கூறினார்.

இதனிடையே, இறுதி ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் முறையாக விற்கப்படுவதை உறுதி செய்ய ஊழல் தடுப்பு ஆணையத்துடன் ஒத்துழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேராக் மாநிலத்துக்காக 30 ஆயிரம் டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker