Latestமலேசியா

மகாதீரின் பெயரில் போலி தகவல்கள் ; பிரதமர் அலுவலகம் எச்சரிக்கை !

புத்ரா ஜெயா, ஜூலை.22-  மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பங்களை விளைவிக்கும் நோக்கில் ஒரு சில தரப்பினர் பிரதமர் துன் மகாதீரின் பெயரை தவறாக பயன்படுத்தி அவதூறுகள் பரப்பி விடுகின்றனர் என பிரதமர் துறை அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தற்பொழுது தனது நிர்வாகத்தை வெற்றி பெற செய்ய ஆதரவு திரட்டும் வகையில்  பிரதமர் சில அரசாங்கம் சம்பந்தப்பட்ட நிறுவங்களின் உயர்மட்ட நிர்வாகத்திற்கு தனிப்பட்ட முறையில் மின் அஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியதாக செய்தி பரவுகின்றது. இது முற்றிலும் போலியான கூற்றாகும். பிரதமர் எந்த தரப்பினருக்கும் இது போல் கடிதம் அனுப்பவில்லை.

மேலும் “பிட்கோய்ன்” வர்த்தகத்தை ஊக்குவிக்கும் எந்தவொறு வலைத் தளத்திற்கும் பிரதமர் ஆதரவு நல்கவில்லை. முன்னதாகஅந்த தளங்களுக்கு துன் மகாதீர் ஆதரவு வழங்குகிறார் என வெளி வந்த செய்தியும் உண்மை கிடையாது

இவ்விவகாரம் தொடர்பில் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் (எஸ்கேஎம்எம்) புகார் வழங்கப்படும். எனவே முன்னதாக வெளிவந்த இந்த செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம்.

பிரதமர் பெயரையும் அவரது பதவியையும் கடிதம், இணையத் தளம் ஆகிய அம்சங்களில் தவறாக சித்தரித்து போலி செய்திகளையும் தகவல்களையும் வெளியிடுவதை சில தரப்பினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இது சட்டத்திற்கு புறம்பான செயல் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை பிரதமரின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker