Latestமலேசியா

மாற்றுத் திறனாளி மகளை அடித்து துன்புறுத்திய தாய், அண்ணன்  கைது ! 

கங்கார், ஜூலை, 22 – தனது 14 வயது மாற்றுத் திறனாளி மகளை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் 40 வயது  தாயையும் 15 வயது அண்ணனையும்  காவல் துறையினர் 4  நாட்களுக்குத்  தடுத்து வைத்துள்ளனர்.

மனதை உலுக்கும் இச்சம்பவம் கம்போங்  கியால்   தெங்கா  , மாத்தா ஆயர் பெர்லிஸில்  நடந்துள்ளது. கங்கார்  மாஜிஸ்திரேட் நீதிமன்ற உதவி பதிவாளர் மோனிகா ஜோசப் கைசா  குற்றம் சாட்டப்பட்ட அவ்விருவரையும் தடுப்பு காவலில் வைக்க உத்தரவு வழங்கியுள்ளார்.
தனது சொந்த மகளை மூங்கிலால் அடித்தும்,  சுடுநீரை ஊற்றியும், “பிளயர்”(Plier) கொண்டு துன்புறுத்தும் காணொளி ஒன்று டுவிட்டர் சமூக வலைதளத்தில் நபர் ஒருவரால் பகிரப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களின் வீட்டிற்கு திடீர் சோதனை மேற்கொண்ட சமூக நல  இலாகா அதிகாரிகள் அச்சிறுமியை மீட்டு அவ்ருவரையும்  கைது செய்தனர்.

தற்சமயம் பாதிக்கப்பட்ட அச்சிறுமி துவான்கு ஃபெளசியா மருத்துவனையில் சிகிச்சைப்   பெற்றுவரும் நிலையில், இந்த வழக்கு, சிறுவர் சட்டம் 2001ன் பிரிவு 31 (1) கீழ்  விசாரிக்கப்பட்டு வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker