Latestமலேசியா

வைரஸினால் சாதுவாக மாறிய “ஆவாங் பெசோல்” புலி !

கோலா நெருஸ், ஜூலை.22-  திரெங்கானு வன விலங்கு அதிகாரிகளால் பிடிக்கப்பட்ட “அவாங் பெசோல்” என்றழைக்கப்படும் புலி, ஒரு வித வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அது தனது இயற்கை பண்பினை இழந்து சாதுவாக மாறியுள்ளது என தெரிய வந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் இங்குள்ள கம்போங் பெசொல் லாமா பகுதிக்குள் இரு புலிகள் புகுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதனையடுத்து அப்புலிகளைப் பிடிக்க வனவிலங்கு அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. அதில் ஒரு புலியை வெள்ளிக்கிழமையன்று அதிகாரிகள் பிடித்தனர்.

தற்பொழுது 5 வயதான அப்புலிக்கு “Canine Temper Disorder” எனும்  ஒரு வித வைரஸ் நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. அப்புலியின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட பரிசோதனையில் இது தெரிய வந்துள்ளது என வனவனவிலங்கு இலாகா தலைவர் டத்தோ அப்துல் காடீர் தெரிவித்தார்.

பொதுவாக இந்த வைரஸ் பூனை, நாய் போன்ற விலங்குகளினால் பரப்படடும். ஆனால் மலேசியாவில் பதிவாகியுள்ள முதல் சம்பவம் இதுவாகும்.  இந்த வைரஸ் தாக்கத்தினால் அந்த 5 வயது புலியின் மூளையில் பிரச்சனை ஏற்பட்டு தற்பொழுது அது தனது இயற்கை பண்பினை இழந்து சாதுவாக உள்ளது என அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker