Latestமலேசியா

2000 ஏக்கர் நிலத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விடுங்கள் – சிவநேசன்

ஈப்போ ஜூலை 21, இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தை நிர்வகிக்க முடியவில்லை என்றால் அதனை மாநில அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிடும்படி மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஏ. சிவநேசன் வலியுறுத்தினார்.

தமிழ்ப்பள்ளி மற்றும் இந்திய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு தேசிய முன்னணி அரசாங்கம் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்கியது. இதனை நிர்வகித்து வரும் கல்வி மேம்பாட்டு அறவாரியம் அந்த நிலத்தில் செம்பனை பயிர் செய்யப்பட்டு அதில் அறுவடையையும் தொடங்கியுள்ளனர்.

இதில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை , இதன் வழி தமிழ்ப்பள்ளிகளுக்கும் இந்திய மாணவர்களின் கல்விக்கும நிதி உதவிகள் வழங்க இயலவில்லை , என்றுதான் லாபத்தை பெற முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

அதனை நிர்வாகித்து வரும் இதன் வாரிய உறுப்பினர்களால் இந்த நிலத்தை வழி நடத்த முடுயவில்லை என்றால் அதனை மாநில அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிடும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

இன்று மாநில மந்திரி புசார் இல்லத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்ப்பள்ளி மேம்பாட்டு கருத்தரங்கை நிறைவு செய்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த நிகழ்வில் உரையாற்றி சிவநேசன், பேரா மாநிலத்தில உள்ள தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு தம்மால் முடிந்த உதவிகள் தயாராக உள்ளதாவும் தேவைகளை முன் வைக்கலாம் என்றார்

இந்த நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள், தலைமையாசிரியர்கள் பள்ளி வாரிய உறுப்பினர் சுமார் 500 பேர் கலந்துக்கொண்டனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker