Latestஇந்தியா

298 வினாடியில் 150 திருக்குறள் ஒப்புவிப்பு:- மாணவி தர்ஷினி உலக சாதனை !

திருவண்ணாமலை, ஜூலை. 22- மூன்றாம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவி 289 வினாடிகளில் 150 திருக்குறளை ஒப்புவித்து உலக சாதனை படைத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ,அடுத்த காவேரிப் பாக்கத்தை சேர்ந்தவள் ஆனைக்குட்டி. வயது 30. கூலித்தொழிலாளி. இவரது மகள் தர்ஷினி வயது எட்டு. அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறார். இவருக்கு திருக்குறள் படிப்பதில் ஆர்வம் இருப்பதை அறிந்த ஆசிரியர்கள் மாணவியை மேலும் ஊக்கப்படுத்தி பயிற்சி அளித்தனர்.

அப்போது ஐந்து நிமிடங்களில் 150 திருக்குறளை தர்ஷினி ஒப்புவித்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் கந்தசாமி தலைமையில் சமீபத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாணவி தர்ஷினி 289 வினாடிகளில் 150 திருக்குறள் ஒப்புவித்து சாதனை புரிந்துள்ளார். இதனை சென்னையில் உள்ள ‘டிரம்ப் வேல்ட் ரெக்கார்ட்ஸ் ‘ நிறுவனம் அங்கீகரித்தது. இதற்கான சான்றிதழை கலெக்டர் கந்தசாமி மாணவிகளிடம் வழங்கினார். மேலும் தர்ஷினி குடும்பத்திற்கு முதல்வரின் பசுமை வீடுகள் திட்டத்தின் புது வீடு கட்டுவதற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker