Latestஇந்தியா

உண்மையை சொல்லு சப்னா..! யார் குழந்தைக்கு அப்பா!

கொல்கத்தா, ஜூலை. 24 -கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிறந்த ஒரு குழந்தைக்கு நான்தான் அப்பா என்று கூறி 3 பேர் மருத்துவமனைக்கு வந்ததால் அதன் நிர்வாகம் திகைத்துப் போனது.அதனால் போலீஸ் உதவியை நாடியுள்ளது  மருத்துவமனை நிர்வாகம்.

வடிவேலு மருதமலை படத்தில் போலீஸ்காரராக நடித்திருப்பார் .அப்போது ஒரு பெண்ணை கூட்டி வந்து,  நான்தான் கணவன், நான் தான் புருஷன் என மாற்றி மாற்றி சொல்லுவார்கள். அதன்பிறகு அவர் உண்மையான  புருஷனிடம் அந்தப் பெண்ணை ஒப்படைப்பார். அது போன்றதொரு ஒரு சம்பவம்தான்  வடிவேலுவிடம் மூன்று கணவன்மார்கள் ஒரு மனைவிக்காக சண்டை போடுவர்.இங்கு  ஒரு குழந்தைக்காக மூன்று அப்பாக்கள் சண்டை போட்டுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீபன்கார் பால்  என்பவர் தனது மனைவி என்று கூறி கர்ப்பிணியான சப்னா மைத்ராவை கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதித்தார். ஞாயிற்றுக்கிழமை சப்னாவுக்கு  அழகான பெண் குழந்தை பிறந்தது. தனக்கு பெண் குழந்தை பிறந்த விஷயத்தை வாட்ஸ் அப்பில்  ஸ்டேட்டஸ் போட்டு புகைப்படத்தோடு வெளியிட்டு இருந்தார் சப்னா.

இதைப் பார்த்து ஹர்சா கேத் என்பவர் மருத்துவமனைக்கு வந்தார். சப்னா தனது மனைவி என்றும் அவருக்குப் பிறந்த குழந்தை தன்னுடையது என மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம் நேதாஜி நகர் போலீசார் புகார் அளித்தது.

அங்கு போலீசார் நடத்திய   விசாரணையில் ஹர்சா, சப்னாவுடன் நடந்த திருமண சான்றிதழ் உள்ளிட்ட பலவேறு ஆவணங்களை காட்டியுள்ளார். இதையடுத்து ஹர்சா உண்மையான கணவர் தான் என முடிவு செய்தது. பின்னர் அவரை மட்டும் போலீசார் மருத்துவமனையில்  இருக்க அனுமதித்தனர்.அதே வேளை தீபன்கர் பாலை விரட்டியடித்தனர்.

இதனிடையே திடீர் திருப்பமாக பிரதீப் ராய் என்ற இளைஞர் ஒருவர், தான் சொப்னாவின் உண்மையான கணவன் என்று மருத்துவமனைக்குச் சென்று கூறியுள்ளார் .இதனை கேட்டு தலைச்சுற்றிப்  போன மருத்துவமனை ஊழியர்கள் 3 கணவன்மார்களையும் விரட்டி அடித்ததோடு மீண்டும் போலீசாரை நாடினர். குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதில் என்ன ஒரு திருப்பம் என்றால் … இது வரை சப்னா யார் தன்னுடைய குழந்தைக்கு உண்மையான அப்பா என்பதை  சொல்ல மறுத்து வருகிறார். அவர் சொன்னால் தான் உண்மை தெரியும் என்பதால் 3 கணவன்மார்களுடன் போலீசாரும் காத்திருக்கின்றனர்

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker