Latestமலேசியா

குழந்தையை கைவிடவில்லை ; குற்றத்தை ஏற்க மறுத்த தாய் !

கோலாலம்பூர், ஜூலை.24- குழந்தை கைவிட்ட சம்பவத்தில் தாம் குற்றம் இழக்கவில்லை என தனித்து வாழும் தாய் ஒருவர் இன்று செஷன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

துரித உணவுக் கடையில் பணிபுரியும் அந்த 27 வயது பெண், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தனது மூன்று வயது குழந்தையை நியாயமான மேற்பார்வை இல்லாமல்  ஸ்தாப்பாக்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விட்டுவிட்டதாக 2001 குழந்தைகள் சட்டம் செக்‌ஷன் 33 (1) (சி)இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

இன்று இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்ட பின் அந்த பெண் தாம் தவறு இழைக்கவில்லை என அழுது கொண்டே கூறினார்.  இந்நிலையில்  அந்த பெண்னுக்கு ஒருவர் உத்திரவாதம் , கூடுதல் நிபந்தனையுடன்  20,000 வெள்ளியிலான ஜாமீன் வழங்க வேண்டுமென அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.

ஆனாலும் தனக்கு உத்திரவாதம் வழங்க யாரும் இல்லை என அந்த பெண் தெரிவித்ததை அடுத்து, வழக்கை செவிமடுத்த நீதிபதி ஜாமீனை மறுத்தார். மேலும் அவர் இந்த வழக்கினை வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

அப்பெண்மணிக்கு 6 வயதில் மற்றொரு குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker