Latestமலேசியா

சபா விடுதி சிசிடிவி பதிவுகள் அழிந்து விட்டன ; அதிகாரிகள் கூறினர் !

கோலாலம்பூர், ஜூலை.24- அமைச்சர் அஸ்மின் அலியை சம்பந்தப்படுத்தி பேசப்பட்ட ஓரின சேர்க்கை காணொளி விவகாரத்தில் சபாவில் உள்ள விடுதி அறைக்கு வெளியே உள்ள சிசிடிவி கண்காணிப்பு காமிரா பதிவுகள் அழிந்து விட்டதாக விசாரந்தஅதிகாரிகள் தம்மிடம் தெரிவித்ததாக பார்ஹாஷ் வாபா கூறியுள்ளார்.

இந்த காணொளி விவகாரம் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்படு தடுப்பு காவலில் வைக்கப்பட்ட அவர், 8 நாட்களுக்கு பிறகு நேற்று விடுவிக்கப்பட்டார். விசாரணை நேரத்தில் தம்மிடம்  “இந்த காணொளி மற்றும் சட்டவிரோத பொருட்களுக்கு தொடர்பில்லாத கேள்விகள்” கேட்கப்பட்டதாக டத்தோஶ்ரீ அன்வாரின் அரசியல் செயலாளரான அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் நடந்ததாக கூறப்படும் சபாவில் உள்ள விடுதி அறையின் வெளியே உள்ள சிசிடிவி கண்காணிப்பு காமிரா பதிவுகள் இதில் சம்பந்தப்பட்ட இருவரும் முகத்தையும் தெளிவாக படம் பிடித்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

அந்த காமிரா பதிவு காணொளி குறித்து நான் கேட்டப் போது, அவை அனைத்து அழிந்து விட்டதாக அதிகாரிகள் என்னிடத்தில் கூறினர் என பார்ஹாஷ் இன்று ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே அந்த காமிரா பதிவு குறித்து அறிந்துள்ளதாக  விடுதி தப்பினர் தொடர்பு கொண்டபோது கூறியதாகவும் அந்த ஊடகத்தின் செய்தியில் தகவல் உள்ளது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker