Latestமலேசியா

சாலை விபத்தில் 11 வயது சிறுவன் மரணம்!

இஸ்கண்டார், ஜூலை 24 – ஜோகூரில் , கேலாங் பாத்தா எனுமிடத்தில்   தாய் ஒருவர்  ஓட்டிவந்த கார் பேருந்துடன் மோதியதில் அவரின் 11 வயது  மகன் மரணமுற்ற துயரம் நிகழ்ந்துள்ளது.

அச்சம்பவத்தின் போது காரில் அவரது மற்ற இரு மகள்களும் உடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.   ஆரோன்  சோங்  ஜூன்  யீ எனும் (வயது 11),சிறுவன்  தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பயனளிக்காமல் மரணமடைந்தான்.

43 வயதான அந்தத்  தாயும்  இரு மகள்களும் சிராய்ப்புக் காயங்களுடன் உயிர் தப்பினர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker