Latestஉலகம்

நீர் சருக்கி உடைந்ததில் 8 வயது சிறுமி பலி

அன்ஹிஉய், ஜூலை.24 – சீனாவின் தங்கும் விடுதி ஒன்றில் நீர் சருக்குத் தளத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென்று மிதவை நீர் சருக்கி  உடைந்ததில் விழுந்ததில் 8 வயது சிறுமி பலியானார்.

கடந்த ஜூலை 20 தேதி, மாலை 4 மணியளவில் ஃபெங்டா இன்டர்நேஷனல் ஹாட் ஸ்பிரிங் ஹாலிடே ரிசார்ட் (Fengda International Hot Spring Holiday Resort)  இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிகிறது. அந்த நீர் சருக்கியின்  மேல் பாகம் சரிந்து விழுந்ததில், அச்சிறுமி பலியாகியதாக உள்ளுர் ஊடகம் வெளியிட்ட செய்தியின் வழி தெரியவந்துள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பான காணொளியில் அச்சிறுமியின் தாயார், ‘ஆம்புலைன்ஸைக்கு அழையுங்கள்’ ‘ஆம்புலைன்ஸைக்கு அழையுங்கள்’ என்று கதறுகிறார். அதன் பிறகு, ஹுங்க்ஷன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்துப் பார்த்ததில், சிறுமி  இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இதற்கிடையில், மேலும் நான்கு சுற்றுப்பயணிகள் உள்காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர். இந்த விபரீதம் நிகழ்ந்ததற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker