Latestமலேசியா

பள்ளிகளைச் சீரமைக்க, கொடுத்த கடனைக் கேட்பதா? ரஹ்மான் டஹ்லான் சாடல்

கோலாலம்பூர், ஜூலை 23 – சரவாக்கில் உள்ள பள்ளிகளைச் சீரமைக்க மானியம் கொடுப்பதற்கு முன்னர், அது மத்திய அரசிடம் பட்டிருக்கும் கடனை செலுத்த வேண்டுமென கூறுவது நியாயமில்லை என பதிலடி கொடுக்கப்பட்டது,

சரவாக் பள்ளிகளின் சீரமைப்புக்கு நிதியளிப்பதற்கு முன்னர், மாநிலம் பட்டிருக்கும் கடனை முதலில் அடைக்க வேண்டுமென நிதியமைச்சர் லிம் குவான் கேட்டுக் கொண்டதை அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ரஹ்மான் டஹ்லான் சாடியுள்ளார்.

2017 மார்ச் 3இல் ஜசெகவின் வாக்குறுதியை குவான் எங் மீள்பார்வை செய்ய வேண்டுமென்றும், சபா, சரவாக்கில் வசூலிக்கப்பட்ட சில வகையான வரியை மாநிலத்துக்குத் திருப்பித் தருவதாக வாக்குறுதி கொடுத்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

கடந்தாண்டு எண்ணெய்க்கான 5 விழுக்காட்டு உரிமத் தொகையாக 158 கோடியை சரவாக்கிற்கும் 132 கொடி ரிங்கிட்டையும் மத்திய அரசு செலுத்த வேண்டும்.

ஆனால், பக்காத்தானின் வாக்குறுதியின்படி 15 விழுக்காடு மானியமாக சராவாக்கிற்கு 474 கோடியும் சபாவிற்கு 396 கோடி ரிங்கிட்டும் தரவேண்டும் என ரஹ்மான் டஹ்லான் சுட்டிக்காட்டினார்.

35 கோடி மானியத்தை மத்திய அரசு தர முடிவு செய்திருப்பதாகவும் ஆனால், மத்திய அரசிடம் இருந்து சரவாக் பெற்றிருக்கும் 235 கோடியைத் திருப்பித்தர வேண்டுமென குவான் எங் குறிப்பிட்டிருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker