Latestஉலகம்

பிரிட்டனின் புதிய பிரதமர் போரிஸ் குறித்த அதிரும் தகவல்கள்!

லண்டன், ஜூலை. 24- பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்கள்ள போரிஸ் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தகவல் வெளிவந்துள்ளன.

கனச்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் பிரிட்டனின் புதிய பிரதமராகவும் உள்ள போரிஸ் ஜாக்சனுக்கு வயது 55 ஆகும்.

கடந்த 1987ஆம் ஆண்டு அலிக்ரா மோஸ்டின் என்ற பெண்ணை மணந்தார் .பின்னணி 1993ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பிரிந்தனர். இதையடுத்து சில வாரங்களில் மரினா வீலர் என்ற பெண்ணை இரண்டாவதாக மோரிஸ் மணந்தார் .

திருமணத்துக்கு முன்னரே மரினா கர்ப்பமாக இருந்த நிலையில் அடுத்து 5 வாரத்தில் தம்பதிகளுக்கு குழந்தை பிறந்தது. இதன் பின்னர் போரிஸூக்கு மேலும் நான்கு குழந்தைகள் பிறந்தது. நான்கு குழந்தைகள் அவரின் மனைவிக்கு பிறந்தது .இன்னொரு குழந்தை அவர் தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு பிறந்தது.

இவர் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது உண்டு. கடந்த 2006ம் பிரபல பத்திரிக்கையாளர் அன்னா பசக்கர்லியுடன் தொடர்பு உள்ளதாக முன்னணி பத்திரிகையான ‘நியூஸ் ஆப் தி வேல்ட் ‘ செய்தி வெளியிட்டது.

இதனிடையே கடந்த 2018 செப்டம்பர் மாதம் போரிஸ், அவரது இரண்டாவது மனைவி மரினாவும் ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அதில் நாங்கள் சில காலமாகவே பிரிந்து வாழ்கிறோம் இருவரும் விவாகரத்து பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளோம் என கூறப்பட்டிருந்தது.

இதனிடையில் தற்போது கேரி சைமண்ட்ஸ் என்ற இளம்பெண்ணை போரிஸ் காதலித்து வருகிறார் என தெரிய வந்தது . போரிஸின் மகள் லாரா வயது 26 ஐ விட 5 வயது பெரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker