Latestமலேசியா

6 ஜேபிஜே  அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு !

பட்டர்வெர்த், ஜூலை.24- 73,600 வெள்ளி தொகையிலான லாரி நிறுவனங்களின் பாதுகாப்பு குற்றம் தொடர்பில் மேலும் 6 சாலை போக்குவரத்து அதிகாரிகள் ( ஜேபிஜே) இன்று பட்டர்வெர்த் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) சட்டம் 16 () மற்றும் (பி) ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் 18 ஜேபிஜே அதிகாரிகளில் இந்த அறுவரும் அடங்குவர்.

சாலைக் குற்றங்களைச் புரிந்த லாரி ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க கையூட்டு பெற்றதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த அறுவர் மீதும் மொத்தமாக 63 குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. அவர்களில் அகமட் டேனியல் மகேந்திரன் (வயது 36) எனும் அதிகாரியின் மீது மட்டுமே 36 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அவர்கள் அனைவரும் 2016ஆம் ஆண்டு தொடங்கி 2018ஆம் ஆண்டு வரை மத்திய செபராங் பிறை பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் இக்குற்றங்களை புரிந்துள்ளதாக கூறப்படுகின்றது. குற்றப்பத்திரிக்கை வாசித்த பின் அறுவரும் தங்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.

இந்நிலையில் நீதிமன்ற தரப்பு 5,000 வெள்ளியிலிருந்து 25,000 வெள்ளி வரை ஜாமின் தொகையை நிர்ணயித்து வழக்கினை வரும் செபடம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker