Latestமலேசியா

அண்ணனுக்குத் தம்பி தந்த பரிசு

ஜோகூர், ஜூலை 25 –  கைப்பேசி பவர் பேங் (பேட்டரி சேமிப்பு வங்கி) ஒன்றை வாங்கத்  திட்டமிட்டு, பணத்திற்காக மாத இறுதி வரை காத்திருக்க அண்ணனுக்கு, தம்பி வீட்டில் தயாரிக்கப்பட்ட பவர் பேங்கை பரிசளித்தது டுவிட்டர் சமுக வலைதளத்தில் வைரலாகியது.

தன் தம்பி,  வீட்டில் உருவாக்கிய ‘பவர் பேங்’ கருவியை, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். அவர் வேலை முடிந்து வீடு திரும்பியபோது தனது சகோதரரால் செய்யப்பட்ட பவர்பேங்கை வழங்கினார்.

மேலும் நேற்று முன்தினம், தன் தம்பி உருவாக்கிய பவர் பேங்கைப் பயன்படுத்தி தனது கைபேசி சார்ஜ் செய்யப்படும் வீடியோவையும் பகிர்ந்து கொண்டார்.

சுல்தான் இஸ்மாயில் பள்ளியில் படித்து வரும் அவரது தம்பி, வீட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களின் வடிவமைப்பை மேம்படுத்தும் ஆர்வம் கொண்டிருப்பவர் என்று அவர் மேலும் கூறினார்.

இச்செய்தி வைரலாகிய வேளையில், பலரிடமிருந்து பாராட்டுகளையும்  பெற்று வருகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker