Latestமலேசியா

இந்தியர்களுக்கு 1212 மெட்ரிகுலேஷன் இட ஒதுக்கீடு மட்டும்தானா? டி.மோகன் கேள்வி 

கோலாலம்பூர், ஜூலை.25-  ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் உள்ள இந்திய மாணவர்கள் இடைநிலைப்பள்ளி கல்வியை முடித்து உயர்க்கல்வி பயிலச் செல்லும் நேரத்தில் மெட்ரிகுலேஷன் கல்விக்கான இடம் ஒதுக்கீடு விவகாரம் பல்வேறு கேள்விகள் எழும்புகின்றது.

இந்நிலையில் நேற்று இவ்விவகாரம் தொடர்பில் மேலவை உறுப்பினர் செனட்டர் டத்தோ டி.மோகன் நேற்று கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் பேசிய வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், முந்தைய தேசிய முன்ணணி ஆட்சிக்காலத்தில் இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் கல்விக்கான இட ஒதுக்கீடு ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டுதான் இருந்தது. கடந்த ஆண்டு கூட தேர்தலுக்கு முன் இந்திய மாணவர்களுக்கு 2,200 இடங்கள் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விண்ணப்பங்களும் பெறப்பட்டன.

இருந்த போதிலும் பொது தேர்தலுக்கு பின் பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் 2018ல் இந்திய மாணவர்களுக்கு சுமார் 1,804 இடங்கள் வழங்கியது. ஆனால் இவ்வருடம் சுமார் 1,212 இடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தில் 4 முழு அமைச்சர் பதவியிலும் ஒரு துணையமைச்சர் பதவியிலும் இந்தியர்கள் உள்ளனர். இருந்த போதிலும் மெட்ரிகுலேஷன் கல்விக்கான இட ஒதுக்கீடு குறைக்கப்படுவது இன பாகுபாட்டினை புலப்படுத்துகின்றது என அவர் அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்

கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட 2,200 இட ஒதுக்கீடு “one-off” எனச்சொல்லப்படும்  ஒரு முறை வாய்ப்புதான் என கல்வி அமைச்சு அறிவித்திருந்தது

இது மக்களிடையே பல்வேறு விமர்சனங்களை எழுப்பிய நிலையில் மொத்தமாக மெட்ரிகுலேஷன் இடங்கள் 25,000 இல் இருந்து 40,000க்கு அதிகரிக்கப்படும். அதில் 10 விழுகாடு அதாவது 4,000 இடங்கள் பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு வழங்கும் முறை நிலைநிறுத்தப்படும் என கல்வியமைச்சர் மஸ்லி மாலேக் அறிவிப்பு செய்தார்.

ஆனால் தற்பொழுது  டத்தோ டி.மோகன் வெளியிட்ட இட ஒதுக்கீடு எண்ணிக்கை கணக்கு மக்கள மத்தியில் பெரும் குழப்பத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தி வருகின்றது

இவ்விவகாரம் குறித்து தகவல் அறிய வணக்கம் மலேசியா மலேசிய பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தியை தொடர்பு கொள்ள முயற்சித்தது. ஆனால் அவரிடமிருந்து எந்த ஒரு கருத்தும் இந்த செய்தி வெளியிடப்படும் வரை  கிடைக்கப்பெறவில்லை.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker