Latestஉலகம்

சங்கிலியால் கட்டி சித்திரவதை; தப்பித்தச் சிறுவன் தந்தை மீது போலீஸ் புகார்

மாஸ்கோ, ஜூலை.25- தனது குறும்பு மகனின் அடாவடிச் செயல்களைத் தாங்கிக் கொள்ள முடியாத தகப்பனார் அவனை சங்கிலியால் கட்டிப் போட்டதால் கைது செய்யபட்டார்.

கராஸ்னோடர் வெலிகோவெக்னோய் எனுமிடத்தில் 10 வயது  மகன் மிகவும் குறும்புத்தனம் செய்து வந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் மகனுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று இரும்புச் சங்கிலியால் கட்டிபோட்டு உணவு மற்றும் தண்ணீர் கொடுக்காமல் கடந்த சில தினங்களாகச் சித்திரவதைச் செய்து வந்த தந்தை ஒருவரை ரஷ்ய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து, டிக்கோன் என்ற அச்சிறுவன் கராஸ்னோரடரிலுள்ள தம்முடைய வீட்டிலிருந்து தப்பித்து வந்த பின் தெரிய வந்தது. தப்பித்து வந்த அந்த சிறுவன் உணவு வாங்குவதற்காக அப்பகுதியிலுள்ள கடைக்குச் சென்றிருந்த போது அந்தக் கடையில் வேலை செய்யும் நபர் அச்சிறுவன் சங்கிலியால் கட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட அந்த சிறுவனை விசாரித்தப் போது, தம்முடைய தந்தை எப்போதும் தம்மை வீட்டின் கீழ்பகுதியிலுள்ள ஸ்டோரில் சங்கிலியால் கட்டிப் போட்டு கொடுமைப் படுத்தி வருவதாகத் தெரிவித்தான்.

மேலும், தன்னுடைய தந்தை வளர்ப்புத் தாயின் பிரசவத்திற்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவதற்காக வீட்டிலுள்ள ஸ்டோரில் அடைத்து வைத்திருந்த வேளை அச்சிறுவன் அங்கிருந்து தப்பித்து வந்துள்ளான் என்பது தெரிய வந்தது.

இதனை கேள்வியுற்ற அந்தக் கடை ஊழியர், காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுவனின் சங்கிலியை அறுத்து,  மீட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனைக்கு பின் அச்சிறுவனை சிறுவர்  காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளான். அச்சிறுவனைப் பராமரிக்கும் உரிமை அச்சிறுவனின் தாய்க்கு வழங்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது ஒரு தொழிலதிபராக இருந்த டிக்கோனின் தந்தை, தனது மகன் விளையாட்டாக சுயமாகத்  தன்னைச் சங்கிலியால் பிணைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker