Latestஉலகம்

நகரும் படிக்கட்டில் காலை இழந்தார் முதாட்டி!

ஹெயிலொங்ஜியாங், ஜூலை 25 – 60 வயதான முதாட்டி, நகரும் படிக்கட்டில் சிக்கி, தனது இடது காலை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜூலை 20 ஆம் தேதி ஹெயிலொங்ஜியாங் தலைநகர் ஹார்பின், சீனாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இச்சம்பவம் நடந்தது.

நகரும் படிக்கட்டின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டவாரே இடுப்புக்கும் கீழ் பகுதி,  இடைவெளியில் சிக்கிய வீடியோ காட்சி வைரலாகிப் பரவியது.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அவரை விடுவிக்க முயன்றனர்.  அந்நேரத்தில், அந்த பெண்ணின் இடது கால் ஏற்கனவே முழங்காலில் துண்டிக்கப்பட்டு, அவரது வலது கால் சேதமடைந்ததாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

நகரும் படிகள் சாதாரணமாக இயங்கும்போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக குடும்ப உறுப்பினர்கள் கூறும்போது, ​​நேரில் கண்டவர்கள் வேறுவிதமாகக் கூறினர்.

அந்த நகரும் படிக்கட்டு பழுதாகி சரி செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அப்பெண்மணி அங்கிருந்த தொழிலாளர்கள் எச்சரித்தும், அதைப் பொருட்படுத்தாமல் படிக்கட்டில் ஏறியதாகத் தெரிவித்தனர்.

அது இன்னும் பராமரிப்பில் இருந்தது, ஆனால் அவர் வற்புறுத்தினார், மேலும் எங்களால் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என  பொதுமக்களில் ஒருவர் கூறினார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker