Latestஉலகம்

நாயுடன் திருமணம் – எலிசபெத் ஹோட்டின் முடிவு

அமெரிக்கா, ஜூலை 25 –    49 வயதான முன்னாள் அமெரிக்காவின் மாடல் அழகி எலிசபெத் ஹோட், லோகன் என்ற தனது 6 வயது நாயைத் திருமணம் செய்து கொள்ளப் போகும் தகவல் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

220 முறைகள் காதல் தோல்வியடைந்த பின்னர்,  ஏற்பட்ட ஏமாற்றத்தின் காரணமாக அவர் தமது வாழ்க்கையில் ஆண்களுக்கு இடமில்லை என்ற  முடிவுக்கு வந்து விட்டதாகத் தெரிவித்தார்.

அழைக்கப்பட்ட 20 விருந்தினர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார். மேலும் லோகன் ஒரு தொப்பி, சூட் மற்றும் டை கட்டிய உடையில் திருமண மோதிரம் மாற்றிக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் லோகனின் நண்பர்களான, அஜாக்ஸ் மற்றும் பெர் அவரது உடன் செல்பவர்களாக இருப்பார்கள்.  ஹோட் இதற்கு முன்னர், லோகனை நிச்சயம் செய்து கொண்டார் ஆனால்,  திருமணம் செய்து கொள்ளவில்லை.

எட்டு ஆண்டுகளில் எனக்கு 220 காதல் தோல்விகள் கிடைத்தன. அவை எல்லாம் லோகனுடன் திருமணம் செய்து கொள்வதற்குதான் என்று நான் நினைக்கிறேன். லோகன் என்னை ஒருபோதும் விட்டுவிட்டு சென்றது இல்லை. சிலர் இந்த யோசனை பைத்தியம் என்று நினைக்கிறார்கள், ஆனால் எனக்கு இது சரியாகவே இருப்பதாக உணருகிறேன் என்று ஹோட் தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker