Latestமலேசியா

அஸ்மின் கட்சி மாறுவது பற்றி எனக்குத் தெரியாது – அன்வார்

கோலாலம்பூர், ஜூலை 27 – தமது துணைத் தலைவர் அஸ்மின் அலி கெராக்கானில் சேரப் போவது பற்றி தமக்குத் தெரியாது என அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அது பற்றிய யூகங்களுக்குப் பதில் சொல்ல முடியாது என்றும் அஸ்மின் மீது அவதூறு பரப்ப வேண்டாமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

நேற்று, இணைய பத்திரிகை ஒன்று, அஸ்மின், கட்சியில் ஏற்பட்டுள்ள மோதலின் காரணமாக கெராக்கான் கட்சியில் சேர முடிவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது. எனினும், அஸ்மின் அது பற்றி எதுவும் சொல்லாமலிருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

14ஆவது பொதுத்தேர்தலில் படுதோல்வியை அடுந்த கெராக்கான் தேசிய முன்னணியிலிருந்து விலகியது.

இதனிடையே, கெராக்கான் என்பது பல்லின மக்களையும் கொண்டிருப்பதால், அது தகுதியானவர்களை வரவேற்பதாக அதன் தலைவர் டோமினிக் லாவ் குறிப்பிட்டிருந்தார்.

பிகேஆரின் உதவித் தலைவரான சுரைடா கமாருடின், அஸ்மின் கட்சி உறுப்பினகளால் தேர்வு செய்யப் பட்டிருப்பதால், கட்சியிலிருந்து அவரை சுலபமாக அகற்ற முடியாது என குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker