Latestமலேசியா

இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 10 கோடி: என்னவானது? – ராமசாமி கேள்வி

கோலாலம்பூர், ஜூலை 27 – 2019ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட 10 கோடி ரிங்கிட் என்னவானது என் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி. ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியர்களிடையே நிலவும் வறுமையைக் குறைக்கும் பொறுப்பை அமைச்சர் வேதமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டதை ராமசாமி நினைவுகூர்ந்தார்.

அந்தப் பணம் பல்வேறு இயக்கங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டிருந்தாலும், அதில் வெளிப்படையான தன்மை இல்லை என அவர் குற்றம் சாட்டினார்.

தேந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதிநிதிகளின் மன்றத்தில் அதனை அவர் விளக்கியிருக்க வேண்டும். ஆனால், அவர் அதனை செய்யவில்லை.

கூட்டங்களுக்கு அவர் வரத் தவறுவதன் மூலம், அவர் உண்மையை வெளியிட விரும்பவில்லை போல தோன்றுவதாக ராமசாமி சுட்டிக் காட்டினார்.

நிதி எப்படி பெற வேண்டும், செலவழிப்பதற்கான வழிமுறைகள் யாவும் வேதமூர்த்திக்கு தெரியும். எனவே, இந்த விவகாரத்தில் முந்தைய ஆட்சியில் மஇகா செய்த தவறுகளையே வேதமூர்த்தியும் செய்யக் கூடாது.

எனவே, தவறுகள் நடக்காமலிருக்க 10 கோடி ரிங்கிட்டுக்கு கணக்கு வழக்குகளை அவர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

மேலும், பெல்டாவுக்கு அரசு அளித்த நிதியை விட இந்த இந்தியர்களுக்கான மானியம் குறைவாக இருக்கும்போது கூடுதலான நிதியைப் பெறத் தவறியது ஏன் என ராமசாமி வினா எழுப்பியிருந்தார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker