Latestவாழ்க்கை

தாய்ப்பால் ஊட்டும் அம்மாக்களே, கோப்பியை கொஞ்சம் தள்ளிவைப்பீர்!

லண்டன், ஜூலை, 27- பிரசவத்திற்குப் பின்னர் குழந்தைகளுக்கு தாய்ப் பாலூட்டும் தாய்மார்களின் உணவுப் பழக்கம் அனைத்துமே மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

ஏனெனில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் போது அதன்  தாக்கம் குழந்தைகளைத் தான் போய்ச் சேர்கிறது. எனவே, பிரசவத்திற்குப் பின்னர் குழந்தைகளுக்கு தாய்ப் பாலூட்டும் பெண்கள்
கோப்பி அருந்துவதை நிறுத்த வேண்டும் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு பாலூட்டும் காலக் கட்ட முடியும் வரையில் அம்மாக்களுக்கு இது அவசியமாகிறது. அதேவேளையில் கர்ப்ப காலத்திலேயே பெண்கள்
கோப்பி குடிப்பதைக் குறைக்கவும் அல்லது முற்றிலுமாக நிறுத்தி விடவும் மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

ஏனெனில்,  கோப்பியில் இருக்கும் காஃப்பின் தன்மையானது, தொப்புள் கொடியைக் கடந்து கருவில் இருக்கும் குழந்தை மீது ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தான் இந்த எச்சரிக்கை அவர்கள் விடுக்கிறார்கள்.

இதனால் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில்
கோப்பி பெரும்பாலும் தவிர்க்கப்படும். சில வேளைகளில் கோப்பி அருந்தும் பழக்கம் கொண்ட தாய்மார்கள், பிரசவத்திற்கு பின்னரும்
கோப்பி மீது மோகமாக இருப்பார்கள். அப்படி இருக்கிற காலக் கட்டத்தில் காஃப்பின் சக்தி குறைவாக இருக்கின்ற வகையான
கோப்பிகளை ஒரு குறிப்பிட்ட அளவு அருந்தலாம்.

அதாவது, குறிப்பாக  ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் அளவுள்ள இரண்டு கப் கோப்பி மட்டுமே அருந்தலாம். அது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பெரிய பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது.

அதே வேளையில் கோப்பி  அருந்தும் ஆசை அதிகமாக இருக்குமானால்,காஃப்பின் தன்மை குறைவாக இருக்கும் வேறு பானங்களிலும் தாய்மார்கள் கவனம் செலுத்தலாம் என்று அந்த ஆய்வு சுட்டிக் காட்டியது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker