Latestஉலகம்

தேனிலவின் போது எரிமலையில் விழுந்த புதுமாப்பிள்ளை:- அதிர்ச்சியில் உறைந்த மனைவி!!

வாஷிங்டன், ஜூலை.28- அமெரிக்காவை சேர்ந்தவர் கீளே சாஸ்டைன். இவருக்கும் அகைமி என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இவர்கள் கனவோடு கற்பனையோடு மேற்கத்திய தீவான செயிண்ட் கிட்ஸ் தீவுக்கு தேனிலவுக்கு சென்றனர்.

அங்கு ஜோடி நடைபயணம் மேற்கொண்ட போது, சற்றும் எதிர்பாராத விதத்தில் செயல்படாமல் இருந்த ஒரு எரிமலை மீது கீளே சாஸ்டைன் தவறி விழுந்து அலறினார்.

அதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோனார் அகைமி. உதவிக்கு யாரும் இல்லை. ஆனாலும் அகைமி சுதாரித்துக்கொண்டு கணவரை கஷ்டப்பட்டு எரிமலையில் இருந்து வெளியே இழுத்து விட்டார்.அதன்பின் இரண்டு மைல் தொலைவுக்கு கணவரை தோளில் சாய்த்துக் கொண்டு நடந்தே மலை அடிவாரம் வந்து சேர்ந்தார் .

மனைவி தன்னை மீட்டு அடிவாரத்துக்கு கொண்டு வந்து சேர்த்ததை கிளேவால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை போனார். பின்னர் அகைமி,கணவரை புளோரிடாவுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker