Latestமலேசியா

முதிய தம்பதியர் கொலை – இன்னும் பலர் விசாரிக்கப்படுவர்

நீலாய், ஜூலை 28 – கடந்த புதன்கிழமை நீலாய் தாமான் டேசா மெலாத்தியில் முதிய தம்பதியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் பலர் விசாரணைக்கு அழைக்கப்படுவர்.

நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட 4 முக்கிய குற்றவாளிகளிடம் தற்போது வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் நூர் மர்சுக்கி தெரிவித்தார்.

பெறப்பட்ட வாகுமூலத்தின் வழி கொலைக்கான நோக்கம் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இறந்த உடல்களின் மீது எந்தவொரு தீயினால் எரிக்கப்பட்ட அடையாளம் எதுவும் இல்லை. எனவே அது கொலையென வகைப்படுத்தப்பட்டது.

கடந்த வியாழக்கிழமை அந்த முதிய தம்பதியர் தாமான் டேசா மெலாத்தியில் காலை 10.45 மணியளவில் எரிந்த வீட்டில் இறந்து கிடந்தனர்.

நேற்று 30லிருந்து 45 வயதுடைய நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டனர். பிரேத பரிசோதனையில் அந்த மூதிய தம்பதியர் உடலின் பல்வேறு இடங்களில் கத்திக் குத்துக் காயங்கள் காணப்பட்டன.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker