Latestவாழ்க்கை

ஸ்மார்ட் போனில் அதிகம் மூழ்காதீர்! மரணம் நெருங்கும் அபாயம்! -ஆய்வு

நியூயார்க், ஜூலை, 28-  இன்றைய காலக்கட்டத்தில் அதிக அதிநவீன கைத்தொலைபேசிகள் அதிக அளவில் குவிந்து கொண்டிருக்கும் நிலையில், ஸ்மார்ட் போன்களில் அதிக நேரம் மூழ்கிக் கிடப்பவர்களுக்கு உடல் பருமன் உட்பட கொடிய நோய்கள் ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நவீன உலகில் ஸ்மார்ட்போன்கள் இன்றியமையாத ஒன்று தான். பல்வேறு நன்மைகளை அளித்து வருகிறது. ஆனால்,  இளைய தலைமுறையினர் அதில் அதிக நேரம் செலவிடுவதால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும் என்கிற அம்சம் இப்போது அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

அதிக நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் மாற்றம் குறித்து 19 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் படி கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த ஆய்வுத் தகவல் அறிவித்திருக்கின்றனர்.

ஒருவர், நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் முதல் அதற்கு அதிகமான நேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத்தினால் உடல் உழைப்புக்கான காலநேரம் முற்றிலும் குறைந்து விடுகிறது. இதனால் உடற்பருமன் ஏற்படுகிறது.

மேலும் ஸ்மார்ட்போன் அதிக நேரம் பயன்படுத்தப்பட்டால் புற்று நோய், இருதய நோய்,  நீரழிவு நோய் போன்ற  நோய்களுக்கான அறிகுறிகள் உருவாகத் தொடங்கி விடுகின்றன. அதிக நேரம் ஸ்மார்ட்போன்களில் மூழ்கிக் கிடைப்பதால் தனிநபர்களது செயல்பாடுகள், ஒழுக்க நடைமுறைகள் ஆகியவற்றில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.

இதனால் மன ரீதியிலான நெருக்கடிகளுக்கு அவர்கள் ஆளாக நேர்கிறது. ஸ்மார்ட்போன்களில் எப்போதும் மூழ்கி இருக்கும் நபர்களின் இறப்பு என்பது, சராசரி மனிதர்களின் இறப்புக் காலத்தை விட மிக மிக விரைவாக அமைந்துவிடும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker