Latestமலேசியா

எரிவாயு கலன் வெடிப்பு – மூவர் காயம்

போர்ட் டிக்சன், ஜூலை 29 –  சனிக்கிழமை லின்சனில் நைட்ரஜன் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று தொழிலாளர்கள் கடுமையான காயத்திற்கு ஆளாகினர்.

அன்று இரவு 10.15 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் தொழிலாளர்களில் ஒருவர், ‘ஹைட்ராலிக்’ முறையைப் பயன்படுத்தி சிலிண்டரைப் பழுதுபார்த்துக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாகப் போர்ட் டிக்சன் காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் எடி ஷாம் முகமது தெரிவித்தார்.

தொழிலாளர்கள் சிலிண்டரைச் சரிசெய்யும்போது, திடீரென ​​ஒரு சிலிண்டர் வெடித்ததில் அருகில் இருந்த இரண்டு பேரும் பாதிக்கப்பட்டனர்.

சம்பவத்தின்போது டி.முருகன், 44, கே.திரிசெல்வம், 46 மற்றும் பி.ரால்யன், 40, ஆகியோர் காயமடைந்தனர். மேலும் அவர்களின் உடலில் 70 முதல் 95 சதவிதம் வரை தீக்காயம் ஏற்பட்டது என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள் போர்ட் டிக்சன் மருத்துவமனை மற்றும் சிரம்பான் துவாங்கு ஜாஃபர் மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.

இருப்பினும், அதில் குற்றச்செயல் எதுவும் இல்லையென  தெரியவந்தது. தொழிற்சாலையின் ஒரு பகுதி மட்டுமே தீயில் எரிந்ததாகத் தெரிகிறது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker