Latestஉலகம்

(VIDEO) – தட்டில் வைத்த கோழிச் சாப்பிடும்போது துள்ளிச் சென்றது

புளோரிடா, ஜூலை 29 – ஓர் உணவகத்தில் தட்டிலிருந்து கீழே குதித்து செல்லும் ஒரு கோழித் துண்டின் வீடியோ, சமுக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ இரண்டு வாரங்களுக்கு முன்பு புளோரிடாவில் வசிக்கும் ரை பிலிப்ஸ் பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டார். ஆனால் இப்போதுதான் பலரால் அது பகிரப்பட்டு வருகின்றது.

Whatttt Thaaaa Fuckkkkk 🤮… This was not recorded by me… all I did was repost the video TheShade Room

Posted by Rie Phillips on Tuesday, 9 July 2019

உணவகத்தின் மேஜையில், பல உணவுப் பொருட்கள் இருந்தன. அவற்றில் ஒரு கோழித் துண்டு, பரிமாறப்பட்ட உடனேயே, தட்டிலிருந்து நகரத் தொடங்கியது. பின் தட்டிலிருந்து குதித்து தரையில் விழுந்தது, அங்கிருந்த பலரை அதிரவைத்தது.

ரை பிலிப்ஸ் பேஸ்புக்கில் இந்த வீடியோவைப் பதிவு செய்தார். பின்னர் அந்த வீடியோ 19 மில்லியன் பார்வையாளர்களால் காணப்பட்டு, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோரால் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

உணவகத்தின் இருப்பிடம் குறிப்பிடப்படவில்லை, ஆனால் தட்டுக்கு அருகில் தெரியும் சாப்ஸ்டிக்ஸ் மூலம் இது ஜப்பானிய, சீன அல்லது கொரிய உணவகமாக இருக்கலாம் என்று நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், வீடியோவைப் பார்த்த பொதுமக்கள் வெவ்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker