Latestமலேசியா

இந்திராவின் மகள் விவகாரம்: விரைவில் தீர விருப்பம் – ஐஜிபி

கோலாலம்பூர், ஜூலை 30 – இந்திராவின் மகளைத் தேடிக் கண்டுபிடிக்க தாம் தனிப்பட்ட அக்கறை கொண்டிருப்பதாக போலீஸ் தலைவர் அப்துல் ஹமிட் படோர் தெரிவித்தார்.

மறைந்து வாழும் இந்திராவின் முன்னாள் கணவர் முகமட் ரிடுவான் அப்துல்லாவையும் மகள் பிரசன்னா டிக்‌ஷாவையும் தேட தமது அதிகாரிகளுக்குப் பணித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பிள்ளையைப் பராமரிக்கும் விவகாரத்தில் ஒரு குடும்பமே சின்னா பின்னமாகி இருக்கிறது. நாம் மதம் என்ற நோக்கில் பார்க்காமல் தாய், மகள், தந்தை, மகன் என்ற நோக்கில் அதனை அணுக வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

பிரசன்னா டிக்‌ஷாவை மறைத்து வைப்பதில் பாஸ் கட்சியின் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லையென அவர் குறிப்பிட்டார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker