Latestஉலகம்

ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் – 28 பேர் பலி

ஹெராட் (ஆப்கானிஸ்தான்), ஜூலை.31- மேற்கு ஆப்கானிஸ்தானிலுள்ள ஒரு சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் 28 பேர் கொல்லப்பட்டு  10 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம், காந்தஹாரிலிருந்து ஹெராட்டிற்கு வழி செல்லும் நெடுஞ்சாலையில் நிகழ்ந்துள்ளது. இதுவரை குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இன்று காலை நடந்த இந்த வெடிகுண்டு சம்பவத்தில் பெண்கள் உட்பட குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஏஃப்  செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வெடிகுண்டு சம்பவத்தில்  இறப்பின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று ஃபரா அரசாங்க செய்தித் தொடர்பாளர் பாரூக் பராக்ஸாய் தெரிவித்தார். இத்தாக்குதலுக்கு  இதுவரையிலும் யாரும்  பொறுப்பேற்கவில்லை.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker