Latestவாழ்க்கை

இன்று ஆடி அமாவாசை! மறக்காமல் இதை செய்யவும்!

இன்று ஆடி அமாவாசை. மிகவும் சிறப்புமிக்க ஆடி மாதத்தில் அடியெடுத்து வரும் ஆடி அமாவாசை மிகவும் சிறந்த தினமாக கருதப்படுகிறது.இந்த நாளில் நம் முன்னோர்களை வழிபடுவதற்கு ஏற்ற நாளாக கருதி விதவிதமான உணவாக சமைத்து படைத்து வருவர்.

ஆடி அமாவாசை தினத்தன்று வீட்டில் உள்ள அனைவரும் தலைக்கு குளித்து விட்டு உணவு அல்லது வேறு பானங்கள் எதுவும் அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் மறைந்த முன்னோருக்கு விருப்பமான உணவு பொருட்களை சமைத்து படையலிட தயார் நிலையில் இருக்கவேண்டும்.

பூஜை அறையை சுத்தம் செய்துவிட்டு அரிசி மாவு கோலம் இட்டு பின்னர் சிறிய மரப் பலகை வைத்து வெள்ளை துணியை அதன் மீது விரிக்க வேண்டும். இருபுறமும் குத்துவிளக்கை ஏற்றி வைத்துவிட்டு பழங்கள் வைத்து கற்பூர ஆரத்தி ஏற்றி வணங்க வேண்டும் .குறிப்பாக ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலை உணவை உண்ணாமல் விரதம் இருந்து பூஜை முடித்த பின் உணவு எடுத்து காகங்களுக்கு உணவு அளிக்க வேண்டும். அதன் பின்னர் இறைவனை நினைத்து மந்திரங்கள் ஓதி வேண்டிக்கொள்ளலாம்.

இவ்வாறு மேலும் இன்றைய தினத்தில் ஆடை, உணவு உள்ளிட்ட தானத்தை செய்து வந்தால் எப்போதும் முன்னோர்கள் ஆசி கிடைக்கும். மேலும் பரம்பரை சாபங்கள் நீங்கும். முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையும் .குடும்பம் விருத்தி ஆகும். இது நாள் வரை இருந்து வந்த தடைகள் நீங்கும் .முன்னோர்களுக்கு ஆசி கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

ஆடி அமாவாசை விரதம் யார் இருக்க வேண்டும்:- தாய் தந்தை இல்லாத ஆண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும் .பித்ரு தர்ப்பணம் என்றால் என்ன:- தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் இடையே உள்ள வேறுபாடுகள் பெண்ணிற்கு சகோதரர்கள் இருப்பின் அவர்கள் பெண்ணின் பெற்றோருக்கு தர்ப்பணம் விரதம் இருப்பார்கள்.
அப்பா இல்லை என்றால் அம்மா தர்ப்பணம் கொடுப்பார். விரதம் இருப்பார். அம்மா இல்லை என்றால் அப்பா தர்ப்பணம் கொடுப்பது விரதம் இருப்பார் .

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆண்கள் அமாவாசை விரதம் மேற்கொள்வது எப்படி :- ஒரு ஆணுக்கு தாய் இல்லாவிட்டாலும் தந்தை இல்லாவிட்டாலோ அல்லது இருவரும் இல்லை என்றால் அவர்கள் அமாவாசை விரதத்தை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் .தர்ப்பணம் கொடுக்க வேண்டும் .ஆடி அமாவாசை அன்று உபவாசம் இருக்க வேண்டும். கண்டிப்பாக எள்ளும் தண்ணீரும் இறைத்து முன்னோர்களை வழிபட வேண்டும்.


அமாவாசை தினத்தில் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடவும். இயன்றவரை யாருக்காவது உணவுதானம் செய்யலாம். அல்லது பசுவிற்கு அகத்திக்கீரை கொடுக்கலாம்.அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபடுவது அவசியம்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker