Latestமலேசியா

தடுப்புக்காவலில் இருந்த கோபால் கிருஷ்ணன் மரணம்

சுங்கை பட்டாணி, ஜூலை 31 – சுங்கை பட்டாணி போலீஸ் நிலையத்தில் தடுப்புக் காவல் கைதியாக வைக்கப் பட்டிருந்த 21 வயது கோபால் கிருஷ்ணன் ராஜலிங்கம் சுங்கை பட்டாணியில் மருத்துவமனையில் நேற்று பிற்பகல் 2.30 இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

மே 12ஆம் தேதி கோபால் கிருஷ்ணன் பினாங்கில் போதைப்பொருள் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அங்கிருக்கும் போலீஸ் அதிகாரி பல காரணங்களைக் காட்டி தம்மை கடுமையாகத் தாக்கி வருவதாக அவர் தமது தாயாரிடம் முறையிட்டிருக்கிறார்.

ஜூலை 24ஆம் தேதி போலீசாரின் அழைப்பின் பேரில் சுங்கைப்பட்டாணி மருத்துவமனையில் இருந்த தமது மகனைப் பார்க்கச் சென்றதாவும், கோபால் கிருஷ்ணன் உடலில் இரு இடங்களில் காயம் ஏற்பட்டிருந்ததாகவும் இரு கைகளும் வீங்கி இருந்தாகத் தாயார் சக்தி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஜூலை 30ஆம் தேதி கோபால கிருஷ்ணன் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரின் நுரையீரலில் கிருமி தொற்றியதால் அவர் இறந்ததாக மருத்துவர் தெரிவித்தார்.

அது பற்றித் தாயார் சக்தி ராமகிருஷ்ணன்போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அது பற்றிக் குறிப்பிட்ட மலேசியன் தமிழர் குரலின் டேவிட் மார்ஷல், தடுப்புக் காவல் கைதிகளின் இறப்பு வழக்கமான ஒன்றாக இருப்பதாகவும் அதற்கு போலீஸ் துறை சாக்குப்போக்கு சொல்வதாகவும், கோபால கிருஷ்ணனின் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

கோபால் கிருஷ்ணனின் உடல் அலோர் ஸ்டார் மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker