Latestமலேசியா

தன்னைக் கடித்த பாம்பை,  திரும்பக் கடித்த இளைஞன்-  கவலைக்கிடம் ! 

உத்திரபிரதேசம், ஜூலை 31  –   இளைஞர் ஒருவர்  தன்னைக்  கடித்த  பாம்பைத்  திரும்பக் கடித்துத்   துண்டாக்கியச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ் குமார்  என்பவர் வீட்டில் மது அருந்திக் கொண்டிருக்கும் போது திடீர் என அங்கு நுழைந்த பாம்பு,  அவரைக் கடித்துள்ளது. குடிபோதையில் இருந்த அவர் உடனே தன்னைக் கடித்த பாம்பை 4 துண்டுகளாகக் கடித்துத் துண்டாக்கியுள்ளார்.

அவரின் தந்தை பாபு ராம் குறிப்பிடுகையில் , தற்போது தன் மகன் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்புப் பிரிவில் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் குறிப்பிடுகையில் பாம்பு தீண்டியதாக நினைத்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாக அவர் நினைத்துள்ளார் , ஆனால் , அவர் பாம்பைக் கடித்ததால்தான் அங்கு அனுமதித்துள்ளார்  என்பதை அறிந்து அதிர்ந்து போனார்.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker