Latestமலேசியா

யுபிஎன்எம் மாணவர் மரணம் – 18 மாணவர்கள் தற்காப்பு வாதம் செய்ய வேண்டும்

கோலாலம்பூர், ஜூலை 31 – மலேசிய தேசிய தற்காப்புப் பல்கலைக்கழக மாணவர் சுல்பர்ஹான் ஓஸ்மான் சுல்கர்னாயின் மரணம் தொடர்பில், 18 மாணவர்கள் தற்காப்பு வாதம் செய்ய வேண்டுமென கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசுத் தரப்பில் அந்த வழக்கை நிரூபித்துள்ளதால் அந்த உத்தரவை நீதிபதி அஸ்மான் அப்துல்லா விடுத்தார்.

அதில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மாணவர் முகமட் அக்மால் அக்கிப் அலியாஸ் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

2017 மே 22இல் காலை 4.45 மணியிலிருந்து 5.45 வரை சுல்பர்ஹானுக்கு மரணம் விளைவித்ததாக அவர்களின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

முகமட் அக்மால் சுஹைரி அஸ்மால், முகமட் அசமுடின் மாட் சோஃபி, முகமட் நஜிப் முகமட் ராசி, முகமட் அபிப் ரஜ்முடின் அசாட், முகமட் சோபிரின் சப்ரி மற்றும் அப்டோல் ஹக்கீம் முகமட் அலி ஆகியோரே அவர்களாவர். அவர்கள் அனைவரும் 23 வயதுடையவர்களாவர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், கட்டாய மரண தண்டனை விதிக்கப்படலாம். அந்த குற்றத்தில் தூண்டுதலாக இருந்த 12 பேர் குற்றம் சாட்டபட்டனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், 7 ஆண்டு சிறை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

மடிக் கணினி திருடப்பட்டதை ஒப்புக் கொள்ள சித்தரவதை செய்யப்பட்டபோது அந்த மாணவர் மரணமடைந்தார். அந்தச் சம்பவம் யுபிஎன்எம் பல்கலைக்கழகத்தின் கேம் பெர்டானா, சுங்கை பீசியில் மாணவர் தங்கும் விடுதியில் 2017ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி காலை2.30 லிருந்து காலை 5.30 வரைக்கும் பின்னர் 22ஆம் தேதி காலை 1.30லிருந்து காலை 4.30 வரைக்கும் 04-10 எனும் அறையில் நடந்ததாகக் கூறப்பட்டது.

Tags
Show More

Related Articles

error: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker